Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படியும் தமிழகத்தில் நடக்குது… நீங்களே பதில் சொல்லுங்க…!!!

தமிழகத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகைக்கு சிலை வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நிதி அகர்வால். அதனையடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலபிஷேகம் செய்துள்ளனர்.

மேலும் கோவில் கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அதற்கு பாலாபிஷேகம் செய்து இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பரிந்த நடிகை நிதி அகர்வால், “நான் எதிர்பார்க்காத ஒன்று. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இது போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு சிலை வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகைக்கு கோவில் கட்ட இருப்பதை அறிந்த மற்ற நடிகைகளின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குமுறி வருகிறார்கள்.

Categories

Tech |