இந்தியாவில் செல்போன் கடன் தருவதாக மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்புகள் விடுத்தால் அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மக்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு கடன் வாங்குவது வழக்கம் தான். அப்போது பல வங்கிகள், நிறுவனங்கள் மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. அதிலும் சில நிறுவனங்கள் மக்களை வற்புறுத்தி கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்பு விடுத்தால்அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது போல தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க டிஜிட்டல் உளவுப்பிரிவு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சற்று கவனமாக இருங்கள். உங்களை யாராவது கடன் வாங்கச் சொல்லி வற்புறுத்தினால் உடனே புகார் அளிக்க வேண்டும்.