வாட்ஸ்அப் இன் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய அந்தரங்க கொள்கைகளை குறித்து உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கான அந்தரங்க உரிமை தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட புதிய மனுவை உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில் தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.