தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் பழனிசாமி இன்று கையெழுத்திடுகிறார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் படி 20 தொழிற்சாலைகளில் உற்பத்தியும் இன்று தொடங்குகிறது. இது தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும்.