Categories
இந்திய சினிமா சினிமா

Flash News: பிரபல நடிகர் தற்கொலை செய்து திடீர் மரணம்… அதிர்ச்சி…!!!

எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சந்தீப் நாஹர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய திரைப்பிரபலங்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகின்றனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்னவென்று தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதிலும் குறிப்பாக இளம் திரைப் பிரபலங்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சந்தீப் நாஹர் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 36.

அவர் இறப்பதற்கு முன்பு அவர் தன் தற்கொலையில் குடும்பத்தார் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்று நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும், ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |