Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: MLA திடீர் ராஜினாமா…. சிக்கலில் முதல்வர் – பரபரப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் .

ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிலும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |