Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

நாளை திருச்செந்தூரில்…. மாசித்திருவிழா கொடியேற்றம்…!!

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் தென்மாவட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் விழா நாட்கள் அல்லாத மற்ற நாட்ட்களிலும் கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் முருகனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாசி மாதம் முழுவதும் திருச்செந்தூர் வீதிகளில் சப்பர ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊரடங்கால் திருச்செந்தூர் கோவிலில் பல விழாக்கள் நடைபெறாத சூழலில் நாளை மாசித்திருவிழாவுக்கு கொடியேற்ற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |