Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் தம்பதியினர் கொலை…உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்..!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள்  சம்மதம் தெரிவித்த்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ்  மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

Image result for உடலை வாங்க சம்மதம்

திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்  குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.   இதனையடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் சோலை ராஜாவின் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |