ஓபிசி பிரிவில் நான்கு வகையான ஒதுக்கீடு வழங்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2,633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 27% இட ஒதுக்கீட்டை 2%, 10%, 6% , 9% என நான்கு வகையாகப் பிரித்து வழங்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓபிசி பிரிவில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால் இந்த பரிந்துரையை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Categories