Categories
உலக செய்திகள்

கடைக்குப் போக “பாஸ்போர்ட்” வேணுமா?. சுகாதார செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…!

பிரிட்டனில் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவையில்லை என்று சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி பாஸ்போர்ட்டை கட்டாயமாக கொண்டு செல்வதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளர் டொமினிக் ராப் கூறினார். இவரின் இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களிடம் சிறிது கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படாது என்று பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சில நாடுகளில் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற விதியை விதித்து தீவிர பரிசீலனை செய்து வருகிறனர்.

அப்படி செய்வதால் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை உறுதிப்படுத்துகிறது. நாங்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிரிட்டன் மக்களும் பிற நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |