Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில்…. துடிதுடித்து இறந்த…. 3000 வாத்து குஞ்சிகள்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவி ராயபுரத்தில் வசிப்பவர் சுதாகர்(36). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வாத்து வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதையடுத்து பாலாற்றங்கரையில் குடில் போடு கடந்த 8 நாட்களாக 3000 வாத்து குஞ்சிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மேய்ச்சலுக்கு வாத்துகளை ஒட்டி சென்றுள்ளார். அப்போது வாத்துகள் அங்கு தேங்கியிருந்த நீரை குடித்துள்ளது. இதையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே வாத்து குஞ்சுகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுதாகர் குஞ்சிகளை பிடித்து வெளியே விட்டுள்ளார் இருப்பினும் அனைத்து வாத்துகளும் உயிரிழந்துள்ளது. இதையடுத்து கடன் வாங்கி தான் வாத்து குஞ்சிகளை வளர்த்து வந்ததாகவும், அதற்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |