Categories
மாநில செய்திகள்

மகனின் காதணி விழாவிற்கு…. குலதெய்வ கோவிலில் 10 8 கிடா வெட்டி…. விருந்து வைத்த சீமான்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் ஒரு கிராமத்தில் உள்ள வீரகாளி அம்மன் கோவிலில் சீமானுடைய மகன் காதணி விழா நடைபெற்றது. இங்கு சீமான் குல தெய்வ வழிபாட்டிற்காக 108 கிடாய் வெட்டி விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது இது குறித்து சீமான் கூறுகையில், “குலதெய்வ வழிபாடு மற்றும் என்னுடைய மகன் காதணி விழாவிற்கு இங்கு வந்தோம். 108 கிடா வெட்டி விருந்து வைத்து வைத்து நிகழ்ச்சியை முடித்துள்ளோம்.

ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே இருக்கிறார்கள். எனவே விவசாயிகள் கடனாளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரதமரின் அறிவிப்புகள் எல்லாம் வேற்று அறிவிப்புகள் தான். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெற்றி நடை போடும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |