Categories
உலக செய்திகள்

அடடே…! தங்க புதையல் சிக்கிடுச்சு… வியப்பை ஏற்படுத்திய போட்டோ…. உலக நாடுகள் பார்வையில் அமேசான் நதி …!!

ஆச்சரியம் ஏற்படுத்தும்  வகையில் அமேசான் நதிகளில் தங்கம் கண்டறியப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது .

நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமேசான் நதியில் இருப்பது நீரும் ,மணலும் மட்டுமல்ல தங்கமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி நிர்வாகம் மற்றும்  தேசிய ஏரோநாட்டிக்ஸ் வெளியிட்ட புகைப்படத்தில் கிழக்குத் பெருவில் ஏராளமான தங்கம் இருப்பது அனைவருக்கும் மிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எக்ஸ்பிடிஷன் 64ன் குழு உறுப்பினர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் சூரிய ஒளியில் மின்னுகின்ற தங்கம் மிகத் தெளிவாக தெரிகிறது.

பெருவின் மேட்ரே டி டியோஸ் மாநிலத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் நதிகள், குழிகள் இருக்கும். அப்பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும். மேலும் இதில் நூற்றுக்கணக்கான குழிகள் நீர் நிரப்பப்பட்ட படுகைகள் காணப்படுகின்றது. உலகில் தங்க உற்பத்தியில் ஆறாம் இடத்தில் பெரு நாடு உள்ளது என்றும் , மிகப்பெரிய சுயாதீன தங்க சுரங்க தொழில்களை கொண்ட பகுதியில் மேட்ரே டி டியோஸ் ஒன்றாகும் என்பது கூறப்படுகிறது. இப்பகுதியில் சுரங்கத் தொழில் செய்வதால் காடுகள் மாசடைகின்றது. மக்கள் வந்து போவதற்கு வசதியாக இருப்பதால் இங்கு தங்கத்தை எடுப்பதற்கு பெரிய வழி கிடைக்கிறது.

Categories

Tech |