Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரம்…”கொன்றது குரங்குகள் தானா”..? சந்தேகிக்கும் வனத்துறையினர்…!!

குழந்தையை குரங்கு தூக்கி சென்ற விவகாரத்தில் வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மேல அவலங்களை கோட்டை தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் இருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்று இருந்த போது வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் ஒரு குரங்கு குழந்தையை வைத்திருந்தது.

இதைக்கண்ட புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் குழந்தையை அங்கே விட்டுவிட்டு குரங்கு தப்பி சென்றது. மற்றொரு குழந்தை எங்கே என்று தேடிக் கொண்டிருந்தபோது கோட்டை அகழியில் இறந்து கிடந்தது. அந்த குழந்தையும் குரங்கு தான் தூக்கி சென்று குளத்தில் வீசி இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகித்தனர். இதற்கிடையில் அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த  20 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

வனத்துறையினரின் சந்தேகம்

இதற்கிடையில் குரங்குகளை தூக்கிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் வனத்துறையினருக்கு சிறு சந்தேகம் எழுந்துள்ளது. நம் பகுதியில் உள்ள குரங்கு குட்டிகளின் எடை 400 முதல் 500 கிராம் இருக்கும் குட்டிகளை தூக்கிக் கொண்டு செல்லும்போது குட்டியை தாய் குரங்கு பிடித்து இருக்காது. குட்டிதான் தாயை இருக்கமாக பிடித்து இருக்கும். இந்நிலையில் குரங்கு தூக்கிச் சென்றதாக கூறப்படும் குழந்தையின் எடை 1.5 கிலோ. குரங்குகள் மேற்கூரை ஓட்டின் வழியாக இறங்கி குழந்தையை தூக்கிக்கொண்டு சுமார் 5 அடி உள்ள சுவரை ஏறி செல்ல வாய்ப்பு இல்லை.

அப்படி என்றால் குழந்தையை தூக்கிச் சென்றது குரங்கு தானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தையின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தஞ்சாவூரில் குழந்தையை  குரங்குகள் தூக்கி சென்ற விவகாரத்தில் அலுவலர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |