பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் கடந்த 24 மணி நேரத்திற்குள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் கடந்த சனிக்கிழமை அன்று மட்டுமே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று 16, 546 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 65 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 9921 நபர்கள் கடந்த ஒரு வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 1,763 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் நாளொன்றிற்கு பதிவாகும் குறைந்தபட்ச எண்ணிக்கையானது ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவானது. மேலும் கொரோனாவால் 167 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81, 814 ஆக அதிகரித்துள்ளது. இதில் 57,815 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.