Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

ஒரு நிமிடம் கூட தகுதியில்லை…! உடனே பதவி விலகனும்…. காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ..!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் தமது பெரும்பான்மையை இழந்து விட்டது அரசு. ஆளுகின்ற தகுதி இந்த அரசுக்கு கிடையாது இதை உணர்ந்து இந்த அரசானது தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும். பெரும்பான்மை இல்லாத நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் அவர்கள் பதவி விலக வேண்டும். புதுச்சேரி கூட்டணி அரசு பதவி விலகினால்  அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என ரங்கசாமி தெரிவித்தார்.

மேலும் ஒரு நிமிடம் கூட பதவி வகிப்பதற் ஆளுங்கட்சிக்கு அதிகாரம் இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கின்ற  திராவிட முன்னேற்றக்கழகம் – காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சர் நாராயணசாமி  ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்கும் தகுதியை இழந்துவிட்டார் என அதிமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 2மாதங்களே உள்ள நிலையில் புதுவையில் நடந்துள்ள அரசியல் குழப்பம் டெல்லி காங்கிரஸ் தலைமையை நிலைகுலைய வைத்துள்ளது.

Categories

Tech |