திருச்சியில் திருமணமாகி இருபது நாட்களே ஆன போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி சேர்ந்தவர் ஜெயராஜன் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 29 மனைவி சுகன்யா வயது 26 இவர்களுக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகியுள்ளது. ரஞ்சித்குமார் மணிகண்ட ம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் பகுதியில் நேற்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோவின் மீது அவரின் மோட்டார் சைக்கிள் மோதி ரஞ்சித்குமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் திடீரென மருத்துவமனையிலே உயிரிழந்தார். இச்சம்பவம் அவர் குடும்பத்திற்கும் மனைவி சுகன்யா விற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமணமாகி இருபது நாட்களே ஆன நிலையில் இவ்வாறு நடந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் குறித்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.