தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். தமிழகமே மதுவின் மூழ்கி இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கி உள்ளது குறித்து அரசு கவலைப் படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் நீதிபதிகள் முன் வைத்திருக்கின்றனர்.