Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இதெல்லாமா கலக்குவீங்க”… சோதனையில் ஈடுபட்ட போலிஸ்… கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!

ஊமத்தை காய் சாறை கலந்து மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கரியமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் உத்தரன்கொட்டாய் கிராமத்தில் ராமன் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் ராமனை பிடித்து விசாரிக்கும் போது அவர் போலி மதுபானம் தயாரித்து அதில் போதையை ஏற்றுவதற்காக ஊமத்தை காய் சாற்றை கலந்து விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இராமனை கைதுசெய்து அவருடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |