தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மதுரைக்கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் குடியின் பிடியில் விழும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பல்வேறு கொடுமைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது பிரியர்கள் அதை குறித்து கவலை கொள்வதில்லை. இந்த மதுவினால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.
இந்நிலையில் இவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆறு ஓடுகிறதோ இல்லையோ மூலை முடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என்று வேதனை தெரிவித்துள்ளது.