நடிகர் சிம்பு அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் .
இதையடுத்து இவர் பத்துதல படத்திலும் , இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார் . இந்நிலையில் நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது .