கொரோனா தடுப்பூசியின் விநியோக நெருக்கடியால் சீனாவின் சினோபார்மிலிருந்து தடுப்பூசி பெறப்போவதாக சில ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது .
கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்தவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனின் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை தான் பல ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விநியோகம் தாமதமாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கவனத்தை சீனா நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளது.
கடந்த ஜனவரி 31 அன்று ஹங்கேரி அரசு 2.5 மில்லியன் மக்களுக்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனத்துடைய தடுப்பூசியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சீனா தடுப்பூசிகளை பெறும் முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக ஹங்கேரி திகழ்கிறது. செர்பியா கடந்த மாதம் 6.5 மக்கள் தொகையில் 14% மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியுள்ளது .மேலும் சினோபார்ம் தடுப்பூசிகளை பயன்படுத்துவதாக சைபீரியா, போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .கடந்த மாதம் வெளியான தகவலில் ஜெர்மனி ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து தடுப்பூசிகளை பயன்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.