அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தது அபூர்வ நிகழ்ச்சியாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும்-பிரான்சும் அடிக்கடி திடீரென முட்டிக் கொள்ளும். இரு நாடுகளுக்குள் இப்படிப்பட்ட உறவு நிலவி வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளி நாட்டு தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பது அபூர்வம் தான் என்று கூறப்பட்டுள்ளத்து. இந்த தொலைபேசி அழைப்பில் இருவரும் கொரோனா முதல் சீதோஷ்ண மாற்றம் வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர். பாலின சமத்துவம் மற்றும் விரைவில் செயல்பட உள்ள நாசாவின் செவ்வாய்க் கிரக திட்டத்தில் பிரான்ஸின் பங்களிப்பு ஆகியவற்றிற்காக மேக்ரானுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்தார்.