Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின்தான் முதல்வர்… மக்களே முடிவு பண்ணிட்டாங்க… கனிமொழி பேச்சு…!!!

 தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார்.

தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி பயிர்க்கடன் உள்ளிட்டவை பற்றி ஸ்டாலின் சொல்வதை கேட்டு செய்து வருகிறார். எனவே ஸ்டாலின் சொல்வதை ஸ்டாலினே செய்யட்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்று கூறினார். தர்மபுரி தி.மு.க அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னால் கனிமொழி கூறியது, கடந்த 10 ஆண்டுகளாக எந்தத் தொழிலும் புதியதாக தொடங்கவில்லை.

புதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடும் தமிழலகத்தில் வரவில்லை இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை .கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை அ.தி.மு.க சந்திக்க இல்லை. ஆனால் இப்போது அ.தி.மு.க தனது பின்னணியில் பாரத ஜனநாயக கட்சியின் அதிகாரத்தை நிறுத்தி நடக்கயிருக்கும்  தேர்தலை சந்திக்கிறது. நமது சுயமரியாதை உணர்வுகள், திராவிட கொள்கைகள், நீதியை ஒழித்துக்கட்ட நினைப்பவர்களின் பின்னணியில் நாம் இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக தமிழக அரசியலில் பாடுபட்டவர்களான கருணாநிதி, பெரியார், அண்ணாதுரை, போன்றவர்கள் எதற்காக வாழ்நாள் முழுவதும் நினைத்தார்களோ அதை காப்பாற்றும் தேர்தல் இது என்று கூறினார்.

மேலும் மோடி மற்றும் அமித்ஷா இவர்கள் யாரை அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களை மட்டுமே முதலமைச்சர் பழனிச்சாமி சேர்த்துக் கொள்கிறார். தி.மு.க.வின் வெற்றி 200 தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார். பிறகு அதியமான் கோட்டை அருகேயுள்ள எர்ர்ப்படி கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை கனிமொழியை சந்தித்து பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை உருவாக்கித் தந்தும் அதனை கருணாநிதி தன் பொறுப்பில் வைத்தும் மாற்று திறனாளிகளுக்கு நலவாரியம் அமைத்து தந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாற்ற திறனாளிகளின் போராட்டத்தை சரி செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.

Categories

Tech |