Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாத்தி கம்மிங் ஒத்து” மைதானத்தில் ஆடிய அஸ்வின்…. வைரலாகும் வீடியோ…!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் அஸ்வின். இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா? என்ற ஏக்கம் இருந்தது. எனது அப்பா என்னை அணைத்து போட்டிகளுக்கும் அழைத்து வருவார். ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.

என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகளும் வரவில்லை. இந்த போட்டி மிக சிறந்த ஒன்றாக இருப்பதை போல உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங்க் பாடலுக்கு நடன அசைவு செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |