Categories
மாநில செய்திகள்

முதல்வரின் கடிதம் எனக்கு வேனும்… பேரறிவாளன் மனு…!!!

தமிழக முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை வலியுறுத்தி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆளுநர் அந்த மனுவை நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரிடம் முதல்வர் கடிதம் அடித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்த கடிதத்தின் நகலை கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல்வரின் கடித நகலை கேட்டு பேரறிவாளன் விண்ணப்பித்துள்ளார்.

Categories

Tech |