Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் செம அறிவிப்பு…. இனி விமானம் மூலம் தரிசிக்கலாம்!!

கொரோனா பரவல் குறைந்த நிலையில் நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் கொரோனா  வழிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பால்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் ஆந்திர அரசு பல்வேறு வசதிகளை செய்துகொடுக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே பேருந்து மூலமாக ஏழுமலையானை தரிசிக்கவும், ரயில் மூலம் பயணிகளை ஒருங்கிணைக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது “பாலாஜி தர்ஷன்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் செயல்பட உள்ள இந்த புதிய திட்டத்தில் டெல்லி – திருப்பதி இரு மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள், தங்கும் விடுதி வசதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோயில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நபர் ஒருவருக்கு ரூ.16, 535 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

Categories

Tech |