சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக துல்லியமாக திட்டமிட்டு கொள்ளலாம். மெட்ரோ ரயில் செயலியில் பயணம் தொடர்பாக 10 வகையான வசதிகள்அளித்துள்ளன. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயிலின் வழித்தடத்தை அறியலாம் மேலும் மெட்ரோ ரயில் வரும் நேரம் மற்றொரு இடத்தில் இருந்து செல்ல இணைப்பு வாகன சேவை மற்றும் பயண கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பயணிகள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் ட்ராவல் கார்டு மற்றும் ட்ரிப் கார்டுகளில் எவ்வளவு தொகை உள்ளது என்பதையும் அறிந்து வங்கிகளின் மூலம் கிரெடிட் கார்டுமற்றும் டெபிட் கார்டு வழியாக தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த செயலியில்” கியூ. ஆர்” டிக்கெட் வசதியும் உள்ளது .இந்த செயலியில் உள்ள “வாலட்” கணக்கில் பணம் வைத்துக் கொள்ளலாம். க்யூ ஆர் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த செயலி மூலம் தனிப் பயணம் மற்றும் குழு பயணத்திற்கு டோக்கன்கள் வாங்குவதற்கு பதிலாக செயலியின் கியூ. ஆர் டிக்கெட்டை பயன்படுத்தலாம்.இவ்வாறு எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கொரோன பாதிப்பு அதிகமாக இருந்த காலத்தில் பணத்தை கையில் தொடாமல் ரயில் நிலையத்திலும் எந்த இடத்தையும் தொடாமல் பயணிக்க இந்த செயலி மிக வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த செயலின் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை பற்றியும் அறியலாம். அடுத்து வரும் ரயில்களின் நேரத்தையும் துல்லியமாகக் கணக்கிடலாம்.பயணக்கட்டணம் வாகனம் நிறுத்துமிடம் உணவு மற்றும் விடுதிகள் குறித்து விவரங்களையும் மெட்ரோ ரயில் நிலையங்கள் நுழைவாயில்கள் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்தும் அறியலாம். மேலும் மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களும் இதில் உள்ளன .