இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு பல்வேறு துறைகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது முதற்கட்டமாக 4 வங்கிகளை தனியார் மயமாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், அரசுக்கு சொந்தமான பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நான்கு வங்கிகளும் 2021 – 2022ஆன் ஆண்டில் விற்பனைக்கு தயராக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.