பீட்ரூட் ராகி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப்,
உப்பு _ தேவைக்கேற்ப,
ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – கால் கப்,
துருவிய பீட்ரூட் – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முந்திய நாள் இரவே உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சில நிமிடம் நன்கு உற வைத்து, மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு அரைத்த உளுத்தம்பருப்பு மாவுடன், ராகி மாவு, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து 9 அல்லது 10 மணி நேரம் கழித்தபின், அதை தோசை மாவு பதத்தில் நன்கு கரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு பச்சை மிளகாயைசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் பீட்ரூட்டை ஒரு அகலமான முடியில் எடுத்து உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும்.
மேலும் வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்ததும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், துருவி வைத்த பீட்ரூட் துண்டுகளை சேர்த்து, கரண்டியால் நன்கு வதக்கி இறக்கி வைக்கவும். பின்னர் வதக்கி வைத்த பீட்ரூட் கலவையை, கலந்து வைத்த மாவில் போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் லேசாக எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவியபின், கலந்து வைத்த மாவில் ஒவ்வொரு கரண்டியாக எடுத்து, சூடான தோசை கல்லில் ஊற்றி மெல்லிய தோசைகளாக சுற்றி லேசாக எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
இறுதியில் வேக வைத்த தோசையானது, நன்கு வெந்ததும் திருப்பி போட்டு, வேக வைத்து எடுத்து தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறினால், ருசியான ராகி பீட்ருட் தோசை ரெடி.