நைஜீரியாவில் 81 தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு- மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹரம், ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது. நைஜீரியாவின் ராணுவத்தினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அடிக்கடி அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நைஜீரியாவில் தீங்குவிளைவிக்கும் நடவடிக்கையில் 81 போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் . அதனால் அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டதாக நைஜீரிய ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியானது. அதில்,” போர்னோ மாகாண பகுதியில் உலாவிக் கொண்டிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் விமானப்படைகள் மூலம் தீவிரவாதிகள் தங்கிய முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. அவர்களின் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் நைஜீரிய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டிருந்தது .