சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை டெலிவரி செய்த உணவகத்திற்கு 10000 அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஷ்ணு நாகேந்திரா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு தனியார் உணவுக் நிறுவனத்தில் சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி சைவம் என்று அச்சிடப்பட்ட அந்த அட்டையில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. அதை பிரித்து வைத்து சாப்பிடும் போது அதில் சிக்கனில் தயாரிக்கப்பட்ட உணவு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் டெலிவரி நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார் .
அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்டு ஓரிரு நாட்களில் உணவுக்கான பணத்தை திரும்ப செலுத்துவதாக தெரிவித்தன. இதனால் கோபமடைந்த விஷ்ணு நுகர்வோர் குறை தீர்ப்பு ஆயத்தில் அக்டோபர் 1ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த ஆன்லைன் நிறுவனத்தை நடத்திவரும் புட்விஸ்டா இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் சொல்வது பொய் என்றும் அவர் சொல்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வாதாடினார். இந்த பிரச்சனை தொடர்பாக நிறுவனத்திற்கு விஷ்ணு அனுப்பிய ஈ-மெயில் ,அதற்கு மன்னிப்பு கேட்டு அந்த நிறுவனம் அனுப்பிய இ-மெயில் ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பித்தார். இந்த வழக்கு இருபத்தி எட்டு மாதங்களாக நடந்து வந்தது. இதையடுத்து நிறுவனம் செய்த தவறு என்பதை உறுதிப்படுத்தியது. விஷ்ணுவுக்கு 5,000 ரூபாய் நஷ்ட ஈடும், வரவு செலவுக்கு 5000 ரூபாயும், உணவுக்காக செலுத்திய 210 ரூபாய் சேர்த்து 10 ஆயிரத்து 210 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.