Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க காதலை அவங்க ஏத்துக்கல… காதல் ஜோடியின் விபரீத முடிவு… திருவாரூரில் பரபரப்பு…!!

காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி என்பவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் கோபிநாத்தும் ரேணுகா தேவியும் சன்னாநல்லூரில் இருக்கும் ரயில்வே கேட் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கண்டபோது ரேணுகாதேவி இறந்ததும் கோபிநாத் உயிருக்கு போராடி கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

உடனே அவர்கள் கோபிநாத்தை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேணுகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரும் எதற்காக விஷம் குடித்தனர் என்று தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |