Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு அழகையும் கண்டுகளிக்கலாம்… இந்தியாவிலேயே மிக சிறப்பு வாய்ந்தது… கலங்கரை விளக்கத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

11 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலை மோதுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த கலங்கரை விளக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்ட நிலையில், கடந்த 1940 ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்த பிறகு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இதன் மீது ஏறி மாமல்லபுரத்தில் முழு அழகையும் கண்டு ரசித்தனர். இந்த கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி கண்டுகளிக்க ஒரு நபருக்கு பத்து ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தான் இந்தியாவிலேயே மலைப்பாறையின் மீது அதிக உயரத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்ததாகும். அதோடு இந்த கலங்கரை விளக்கம் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |