Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என் குழந்தை கஷ்டப்படுறத பார்க்க முடியல…. விரக்தியில் குடும்பத்தோடு…. எடுத்த விபரீத முடிவு…!!

நாகர்கோவில் பக்கத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன் – சரஸ்வதி. தச்சுத் தொழிலாளியான இவருக்கு மகள் அனுஷ்கா(11) மற்றும் மகன் விகாஷ்(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விகாஷுக்கு பிறந்ததிலிருந்தே சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால் பல இடங்களில் மருத்து சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. எனவே தங்களுடைய மகன் கஷ்டப்படுவதைப் பார்த்து கண்ணனும் சரஸ்வதியும் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் மகனின் மருத்துவ செலவுக்காக அதிகமாக கடன் வாங்கியதால் இன்னும் சிக்கல் அதிகரித்துள்ளது.

எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து சம்பவத்தன்று தூங்கச் செல்வதற்கு முன்பு கண்ணன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுகாரர்கள் பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |