Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… தலா ரூ.1 லட்சம் நிதி உதவி… முதல்வர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து இன்று விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கொடூர விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள், ஈஸ்வரி, மழையழகு மற்றும் கோமதி உள்ளிட்ட ஐந்து பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |