Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்… அஜித்தின் அடுத்த படமும் இவங்க கூட தானா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹெச் வினோத் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட் ஆனது . அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹெச். வினோத்திற்கு தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன்படி இவர்கள் கூட்டணியில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .

Image result for ajith h. vinoth

இதனால் நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும்  ஹெச் வினோத்திற்கு கொடுத்தார். தற்போது இவர்கள் கூட்டணியில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் வலிமை படத்திற்குப் பின் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தை நேர்கொண்ட பார்வை ,வலிமை படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |