Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மறுபடியும் துபாயா?… ஏர்போர்ட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த கீர்த்தி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்காக மீண்டும் துபாய் சென்றுள்ளார் .

தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ ,தெலுங்கில் நானியுடன் ‘ராங்டே’ மற்றும் மகேஷ்பாபுவின் ‘சர்க்காரு வாரி பட்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் ‘ராங்டே’ படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார் .

இந்நிலையில் மகேஷ்பாபுவின் படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் துபாய் செல்வதாக அறிவித்துள்ளார் . மேலும் ஏர்போர்ட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை கீர்த்தி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |