Categories
அரசியல் மாநில செய்திகள்

இது தமிழகத்திக்கு தேவையில்லாத பேச்சு… சசிகலா பற்றி அமைச்சர் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் தேவை இல்லாதவர்கள் பற்றி யாரும் பேச தேவையில்லை என்று சசிகலா வருகை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தேவை இல்லாதவர்கள் பற்றி பேச வேண்டிய தேவையில்லை என்பதால் யாரும் பேசுவதில்லை என்ற சசிகலா வருகை குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார். ஸ்டாலினுக்கு வெற்று என தான் தெரியும். ஏனென்றால் அவர் வெற்றிடத்தை நோக்கி செல்கிறார். தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக சிலர் கூறினர். ஆனால் அதை வெற்றிடமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றி உள்ளார் என புகழாரம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |