நடிகர் விஜய் சேதுபதி ‘உப்பெனா’ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை புஜ்ஜி பாபு இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் .
கடந்த வாரம் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் இந்தப் படம் வெளியான 3 நாட்களிலேயே சுமார் 45 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு வியக்க வைத்திருப்பதாக தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .