சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 277.3 கிமீ தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் வேலையும் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னை – சேலம் ஆறு வழி சாலை திட்டத்தை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுத்துவோம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறோம். விளைநிலங்கள் இருக்கும் பகுதிகளில் சாலையின் நீளத்தை குறைக்க முயற்சிக்கிறோம். நிலத்திற்காக சந்தை விலையை விட அதிக தொகை வழங்கவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.