Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை – கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு …!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று புதுச்சேரியில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒன்றன்பின் ஒன்றாக ராஜினாமா கடிதங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால், புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா ? என்ற சந்தேகம் இருக்கிறது.

ஏற்கனவே முதல் அமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் இடையே கடும் மோதல் நடந்து வருவதையும் சமீபகாலமாக பார்த்து வந்தோம். இத்தகைய சூழ்நிலையில்தான் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக பட்டிருக்கிறார். கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |