புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரண்பேடி சார்பாக சொல்லப் பட்டது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் ஆளுநர் என்ற பொறுப்பிலே நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை முறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள்.
தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் எனக்கு எதிராக போராட்டங்களை நடத்திவருகிறார்கள். என் கடமையை நான் தவறாமல் செய்து வருகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.அதே சமயத்தில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துகிறார், மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்கள் போய் சேர முடியாமல் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது முதலமைச்சர் குற்றச்சாட்டாக இருந்தது.
இப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான், இன்று புதுச்சேரியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜினாமா செய்ததையடுத்து அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா ? இல்லையா ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. விரைவிலேயே சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த அரசு அது வரை நீடிக்குமா ? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு கொண்டிருந்தன.
அத்தகைய சூழ்நிலையில் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தற்போது அந்த பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கூடுதல் பொறுப்பு தமிழிசை சவுந்தரராஜனுக்கு அளிக்கப்பட்டு இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதன் தாக்கத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.