Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் விடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்…. தோல்வியுடன் வெளியேறிய ஆப்கான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றது 

உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் அரை இறுதியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷாய் ஹோப்பும், எவின் லீவிசும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.  அதன் பின் எவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஹெட்மேயர் தனது பங்குக்கு 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷாய் ஹோப்பும் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மிடில் வரிசையில் நிக்கோலஸ் பூரனும், ஜேசன் ஹோல்டரும் ஜோடி சேந்தனர்.  கடைசியில் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் பூரன் 58 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 45 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கான் அணியில் அதிகபட்சமாக ஐட்ரான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 312 ரன்கள் இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் குல்புதின் நைப்பும், ரஹ்மத் ஷாவும் களமிறங்கினர். குல்புதின் நைப் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய இக்ரம் அலியும், ரஹ்மத் ஷாவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இதையடுத்து  சிறப்பாக ஆடி கொண்டிருந்த ரஹ்மத் ஷா 62 ரன்களிலும், இக்ரம் அலி 86 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .

பின்னர் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அஸ்கார் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டம் கடைசி வரை சென்றது. கடைசியில் சையத் ஷிர்சாத் அதிரடியாக 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கெமார் ரோச் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 77 ரன்கள் குவித்த ஷாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்ய பட்டார். இந்த தோல்வியின் மூலம்  ஆப்கான் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு முறை கூட வெல்ல முடியாமல்  பரிதாபமாக வெளியேறியது.

Categories

Tech |