இங்கிலாந்து உருவான கொரோனா போன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய கொரோனா , அதிதீவிர தன்மையுடன் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், அந்நாட்டில் அதிதீவிர தன்மையுடன் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிரேசிலில் பரவும், அதிதீவிர தன்மையுடைய கொரோனா வைரசால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாடு திரும்பிய நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.