சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச ஆன்லைன் பல்பொருள் நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தனது முதல் ஆலையை அமேசான் தொடங்க உள்ளதாக அதன் இந்திய தலைவர் அமித் அகர்வால் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
அமேசான் சென்னையில் தொடங்கும் உற்பத்தி ஆலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முக்கிய அடையாளமாக இருக்கும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதன் மூலம் தமிழக மக்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. ஏனெனில் சென்னையில் தொடங்க இருப்பதால் தமிழக இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.