Categories
உலக செய்திகள்

13 வயது சிறுமியின் எடை…. வெறும் 11 கிலோ தான்…. பட்டினியில் தவிக்கும் குழந்தைகள்..!!

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால் 13 வயது நிறைவடைந்த சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

ஏமன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு அளிக்கும் ஏமன் அரசுக்கும், ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து உள்ள நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஏமன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை உணவு கூட முழுமையாக சாப்பிட முடியாதவர்களாக உள்ளனர்.

ஏமன் நாட்டில் உள்ள பல நகரங்களில் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான சிறுமிகளில் ஒருவர் தான் அஹ்மதியா தஹேர். தற்போது 13 வயது ஆகும் அஹ்மதியா உடல் எடை வெறும் 11 கிலோ தான் இருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அஹ்மதியா மருத்துவமனைக்கு வருவதற்கே நண்பர்கள் மற்றும் சிலரிடம் நன்கொடைகள் சேகரித்து தாய் மற்றும் சகோதரனுடன் நடந்தே வந்துள்ளார்.

அஹ்மதியா தந்தை போரில் இறந்து போனார். அதற்குப் பிறகு இவர்களுக்கு எதுவுமே இல்லாமல் போய்விட்டது. நேரம் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் பச்சைத் தண்ணீரை மட்டுமே குடித்து பசியாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்டது அஹ்மதியா மட்டுமல்ல. 5 வயதுக்குட்பட்ட சுமார் 4 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021 இல் 23 லட்சமாக அதிகரித்துள்ளது ஐநா சபை கூறியுள்ளது. ஏமன் நாட்டில் அதிகாரபூர்வமாக பஞ்சம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்த நாடு உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக பட்டினி மற்றும் நோயிலிருந்து தடுக்கும் ஊட்டச்சத்து
உணவு வழங்கும் சேவைகள் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. நாட்டின் வளமான தேவைக்குத் தேவையான 3.4 ஒரு பில்லியன் டாலர்களில் வெறும் ஒரு டாலர் மட்டுமே கிடைக்கின்றது.

Categories

Tech |