Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு ஒரு முறை…” இஞ்சி சாறு சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது…!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது தேநீர் குடிப்பதற்கு நாம் அனைவரும் விரும்புவோம். டீ காபி போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக இந்த இஞ்சி தேநீரை குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இதனால் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் குணமாகும். இஞ்சியில் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இது வயிறு சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது. இதனை குடித்துவர மலச்சிக்கல் மற்றும் குமடல்  ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

இஞ்சியை இதயத்தின் நண்பன் என்று கூறுவார்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்க இதனை குடித்தால் மிகவும் நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்க இது சிறந்த தீர்வாக அமைகிறது.

மாரடைப்பு அபாயங்களை குறைப்பதற்கு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இஞ்சி தேனீர் இதயத்தை உறுதிப்படுத்துகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு வலிகள் இருக்கும். அப்பொழுது இந்த நீரை குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். வலி, வீக்கத்தை குறைப்பதற்கு இது உதவுகிறது.

இந்த இஞ்சி தேநீரை இன்றைய காலகட்டத்தில் குடித்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.

உடல் செரிமான பிரச்சனைகளை குணமாக்கும். இந்த தேநீரை அருந்தும் போது நீங்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள்.

Categories

Tech |