Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக எலியை பிடித்து…. இங்கிலாந்து பிரதமரின் வீட்டில்…. சேவை செய்து வரும் லாரி….

10 வருடங்களாக பூனை ஒன்று இங்கிலாந்து பிரதமரின் அரசு வீட்டில் தன்னுடைய கடமையை செய்து வந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமரின் அரசு வீடு லண்டனில் உள்ளது. இந்த வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் கடும் பாதிப்புக்கு உள்ளான அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பூனை ஒன்றை தத்தெடுத்துள்ளார். லாரி என்ற பெயரிட்டு அந்த பூனை எலிகளை பிடித்து கொடுத்து வீட்டிலுள்ளா எலித்தொல்லைகளை நீக்கியுள்ளது. இந்நிலையில் லாரி பூனை பிரதமரின் வீட்டுக்கு வந்து பத்து வருடங்கள் முடிந்துள்ளது. டேவிட் கமரூனுக்கு பிறகு தெரசா மே காலம், போரிஸ் ஜான்சன் காலத்திலும் அந்த பூனை தொடர்ந்து தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. இதுகுறித்து பிரதமர் வீட்டில் உள்ள ஊழியர்கள் கூறுகையில், “விலங்குகள் எவ்வளவு விசுவாசமானது என்பதை நிரூபித்துள்ளது.

ஒருநாள் தெருக்களில் கவனிக்க ஆளில்லாத நிலையில் இருக்கும் ஒருவர் மற்றொரு நாளில் உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுடன் அன்பான ஒருவராக மாறிவிடலாம் என்று தெரிவித்துள்ளனர். உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து வந்த லாரி பெரும்பாலும் ஆண்களுடன் நட்புடன் பழகுவது கிடையாது. ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் நெருக்கமாக பழகி உள்ளது. 2019ஆம் வருடம் இங்கிலாந்து பிரதமர் வீட்டிற்கு ட்ரம்ப் வந்தபோது அவருடைய காருக்கு அடியில் படுத்து சொகுசாக லாரி உறங்கியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |