உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலருக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு 25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார பணியாளரான அந்த பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தி 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இரண்டாவது வாரத்தில் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இரண்டு வாரங்களில் மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.